வீடுகளில் உள்ள செப்டிக் டேங்க், தொழிற்சாலைகள் உள்ள கழிவுநீர் தொட்டி, பாதாள சாக்கடை கால்வாய்களில் உள்ள மேன்ஹோல்களில் இறங்கி கழிவுநீரை சுத்தம் செய்யும் பொழுது விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் உயிரிழப்பது அதிகரித்து வருகிறது.
அதில் அதிக உயிரிழப்பு ஏற்படும் மாநிலமாக தமிழகம் உள்ளது. இதனிடையே கையால் மலம் அகற்றும் வேலையை எதிர்க்கும் இயக்கமான கஃபாய் கர்மாச்சாரி அந்தோலன் என்ற இயக்கம் கடந்த ஐந்து ஆண்டுகளாக சென்னை ஐஐடியுடன் இணைந்து செப்டிக் டேங்க் குகளை சுத்தம் செய்வதற்கான ரோபோ எந்திரத்தை உருவாக்க வேண்டுகோள் விடுத்தனர்.
இதுதொடர்பாக சென்னை ஐஐடி மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பேராசிரியர் பிரபு ராஜகோபால் தலைமையிலான மாணவர் குழுவினர் இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண ரோபோ தொழில் நுட்பம் முறை உருவாக்கி ஹோமோசெப் என்ற ரோபோ எந்திரத்தை உருவாக்கினர்.
இந்த கருவி மூலம் செப்டிக் டேங்க் கிளீனர் இப்பகுதியிலுள்ள கெட்டியான கசடுகளை வெட்டி ஒரே மாதிரியாக மாற்றும் வகையில் ரோபோ எந்திரம் உருவாகியுள்ளது. இந்த இயந்திரம் மூலம் கழிவுகளும் உறிஞ்சி எடுக்க முடியும். சென்னை தாம்பரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல் ரோபோ எந்திரத்தை பயன்படுத்துவது குறித்து கழிவுநீர் அகற்றும் தொழிலாளர்களுக்கு ஐஐடி மாணவர்கள் விளக்கினர்
பின்னர் இந்த எந்திரத்தை 2007ஆம் ஆண்டு கழிவுநீர் அகற்றும் பணியின்போது விஷவாயு தாக்கி உயிரிழந்த தொழிலாளியின் மனைவி நாகம்மாளிடம் முதல் எந்திரத்தை ஐஐடி மாணவர்கள் வழங்கினர்.