
இலங்கையை போல் தமிழகமும் மாறும் என்றும் சிஐடியு தென் சென்னை மாவட்ட செயலாளர் பால கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து சிஐடியு ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் சென்னையில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சிஐடியு தென் சென்னை மாவட்ட செயலாளர் பால கிருஷ்ணன், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை பொறுத்தவரை கடந்த 14 நாட்களில் 11 ரூபாய் சென்னையில் உயர்ந்துள்ளது. இதனால் வாகன ஓட்டுநர்கள் வாகனம் ஓட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் எங்கள் வாகனங்களை தமிழக அரசிடம் கொடுத்து விட்டு கூலி வேலைக்குதான் செல்ல வேண்டும். அம்பானி, அதானிக்கு கடன் தள்ளுபடி. ஆனால் ஏழை எளிய மக்களுக்கு விலை உயர்வா. எண்ணெய் விலை ஏற்றுவது எண்ணெய் நிறுவனங்கள் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகிறார்.
எண்ணெய் நிறுவனங்களை கேட்டால் மத்திய அரசுதான் விலையை உயற்றுகிறது என்று கூறுகிறார்கள். விலையை குறைகவில்லை என்றால் அடுத்த இலங்கையாக தமிழகம் மாறி விடும். சுய தொழிலை அழித்து விட்டு தொழில் வளர்ச்சியை பற்றி பிரதமர் மோடி பேசுகிறார். விலையை குறைகவில்லை என்றால் ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தில் உள்ள 50 ஆயிரம் பெரும் ஆட்டோவுடன் வந்து இந்தியன் ஆயில் நிறுவனத்தின் முன்பு முற்றுகை போராட்டம் நடத்துவோம் என்று தெரிவித்தார்.