துரிதமாக நடைபெறும் மழைநீர் வடிகால் பணிகள்… முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு!!

சென்னை மாநகராட்சி மணலி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
துரிதமாக நடைபெறும் மழைநீர் வடிகால் பணிகள்… முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு!!

பருவ மழை காலத்தில் வெள்ள பாதிப்பை சந்திக்கும் பகுதியாக மணலி உள்ளது. இங்கு வெள்ள நீர் புகுவதும், அதே போல ஆற்றில் மழை நீர் சென்று சேராதா நிலை இருப்பதால் தொடர் பாதிப்பில் மணலி புது நகர் பகுதி இருந்து வருகிறது. அந்த நிலையை மாற்ற அங்கு மழை நீர் வடிகால் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

மணலி புது நகர் - வடிவுடையம்மன் கோயில் தெரு, மணலி புது நகர் - 60 அடி சாலை, கார்கில் நகர் ஆகிய பகுதிகளில் தற்போது நடைபெற்று வரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டார்.

இதனை அடுத்து கொருக்குப்பேட்டை இரயில் நிலையம் அருகில் உள்ள கண்ணண் சாலை, தியாகப்பா தெரு, ஏகாம்பரம் தெரு ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் மழை நீர் வடிகால் பணிகளையும் பார்வையிட்டு பணிகளின் நிலைகள் குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டறிந்து பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட்டார்.

கடந்த பருவமழையில் வெள்ளத்தால் பாதிப்பு ஏற்ப்பட்ட பகுதிகளில் நடைபெறும் மழை நீர் வடிகால் பணிகளை முதல்வர் தொடர்ச்சியாக ஆய்வு செய்து வருகிறார். முன்னதாக தி.நகர்,வேளச்சேரி பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டார்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com