அரசு முறை பயணமாக வரும் 26ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருகிறார். அப்பொழுது, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் பல்வேறு திட்ட பணிகளை தொடங்கி வைக்கிறார். இந்த நிலையில் நேரு உள்விளையாட்டு அரங்கில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதா என்பது குறித்து பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்ணர் எ.வ.வேலு, பிரதமர் அமரக்கூடிய மேடைகள், ஒலிபெருக்கிகள், ஒளி விளக்குகள், அனைத்தும் தயார் நிலையில் உள்ளதா? பாதுகாப்பு ஏற்பாடுகள் சரியாக உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்தோம்.
பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் 17,471 கோடி மதிப்பிலான திட்ட பணிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அடிக்கல் நாட்டி தூங்கி வைக்க உள்ளார். நெடுஞ்சாலைதுறையின் முதன்மைச் செயலாளர் தீரஜ்குமார் அவர்களை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனடிப்படையில் அவரும் இந்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றார்.
நெடுஞ்சாலை துறை மட்டுமின்றி ரயில்வேத்துறை உள்ளிட்ட 5 திட்டப்பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார் என்று தெரிவித்தார்.