அனல் மின் நிலையத்தில் 5 பிரிவுகளில் மின் உற்பத்தி நிறுத்தம்

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தொடர்ந்து இன்றும் 5 பிரிவுகளில் மின் உற்பத்தி நிறுத்தபட்டுள்ளது. 1,050 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு அடைந்துள்ளது.
அனல் மின் நிலையத்தில் 5 பிரிவுகளில் மின் உற்பத்தி நிறுத்தம்

தூத்துக்குடியில் உள்ள அனல் மின் நிலையத்தில் 210 மெகா வாட் உற்பத்தி செய்யும் 5 யூனிட்டுகள் உள்ளன. இதன் மூலம் நாள்தோறும் 1,050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. நாள்தோறும் 5 பிரிவுகளிலும் மின்னுற்பத்தி முழு அளவில் உற்பத்தி செய்ய வேண்டுமென்றால் 25 ஆயிரம் டன் நிலக்கரி தேவைப்படும்.

கோடைகால மின்சார தேவைக்காக ஐந்து பிரிவுகளிலும் முழு மின் உற்பத்தி செய்ய வேண்டிய நிலையில், நிலக்கரியின் கையிருப்பு தட்டுப்பாட்டால் 5 பிரிவுகளிலும் முழு மின் உற்பத்தி செய்வது கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தடைபட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாகவே நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் 5 பிரிவுகளிலும் முழுமையாக மின்சாரம் உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது

இதனால், அனல் மின் நிலையத்தில் நான்கு அல்லது மூன்று பிரிவுகள் அவ்வப்போது இயக்கப்பட்ட நிலையில், தற்போது நிலக்கரி இருந்தும் கடந்த 5 நாட்களாக 4 பிரிவுகள் நிறுத்தப்பட்டு 3வது பிரிவுகளில் மட்டுமே 210 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று காலை 1,2, 3,4, 5 ஆகிய பிரிவுகளிலும் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் 1,050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அனல் மின் நிலையத்தின் தலைமைபொறியாளார், கிருஷ்ணகுமாரிடம் தொலைபேசியில் கேட்டபோது, அனல் மின் நிலையத்தில் தற்போது 1லட்சம் டன் நிலக்கரி கையிருப்பு இருப்பதாகவும், காற்றாலை மற்றும் சோலார் மின் உற்பத்தி தற்போது போதுமான அளவு கிடைக்கிறது எனவும், சென்னை மின் பகிர்மான தலைமை அலுவலகத்தில் இருந்த வந்த தகவலின்பேரில் 5 பிரிவுகளும் நிறுத்தப்பட்டுள்ளது .எனவும் அடுத்த தகவல் வந்தவுடன் .தான் எந்த பிரிவுகள் இயக்கப்படும் என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com