வெளி ஊர்களுக்கு செல்லும் வீரர்கள் இனி தமிழக மேம்பாட்டு துறையில் பதிவு செய்ய வேண்டும்....

 தீனதயாளன் விஷ்வா
தீனதயாளன் விஷ்வா

சென்னை அண்ணாநகரில் உள்ள இளம் டேபிள் டென்னிஸ் வீரர் மேகலாயாவில் உயிரிழந்தது தொடர்பாக அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் மற்றும் அண்ணா நகர் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் விஷ்வா தீனதயாளன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

அதன்பின் அமைச்சர் மெய்யநாதன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், இளம் வீரர் விஷ்வா அவர்கள் எதிர்காலத்தில் இந்திய அளவிலே டேபிள் டென்னிஸில் அவர் பங்கேற்க உள்ளார். கடந்த காலத்தில் பல பதக்கங்களை வென்றுள்ளார். இது மட்டுமில்லாமல் தமிழக அரசு சார்பாக அவருக்கு விருது வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இவருடைய உயிரிழப்பு மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. இந்த செய்தியை தமிழக முதலமைச்சர் அறிந்தவுடன் சட்டமன்ற கூட்டத்தொடரில் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் இரங்கல் தீர்மானம் கொண்டுவந்து மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதுமட்டுமில்லாமல் இவர்கள் குடும்பத்திற்கு இரங்கலை தெரிவித்தது மட்டுமில்லாமல் அவருடைய குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரண நிதியை வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக இவருடன் சேர்ந்து பயணித்த ரமேஷ் சந்தோஷ் குமார், அபினேஷ், கிஷோர் குமார் ஆகிய 3 பேரும் ஷில்லாங்கில் இருக்கக்கூடிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்ற அவர் அவர்களுக்கு தேவையான மருத்துவ செலவுகளை தமிழக அரசு ஏற்றுக் கொண்டுள்ளது என்றார்.

இந்த கோர சம்பவம் தொடர்பாக நாங்கள் கற்றுக்கொண்ட பாடம் என்னவென்றால் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்கு செல்லும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தமிழக மேம்பாட்டு துறையில் பதிவு செய்ய வேண்டும் அவர்களுக்கு உரிய பாதுகாப்பும் வழங்குவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com