பெட்ரோல், டீசல் விலை பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. அதன் காரணமாக மொத்தவிலை அங்காடியில் காய்கறிகளின் விலை அன்றாடம் உயர்ந்து வந்தது.
இதனைத் தொடர்ந்து சில நாட்களாக அண்டை மாநிலங்களான ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் பெய்து வரும் மழையின் காரணமாக காய்கறிகள் சேதம் அடைந்திருப்பதால், கோயம்பேடுகாய்கறி அங்காடிக்கு வரக்கூடிய காய்கறிகளின் வரத்து குறைந்து உள்ளது. இதன் எதிரொலியாக மொத்தவிலை அங்காடியில் காய்கறிகளின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.
பெட்ரோல் டீசல் விலை சில நாட்களாக உயர்த்தப்படாமல் இருந்தாலும் லாரி உரிமையாளர்கள் போக்குவரத்து வாடகை அதிகரித்திருப்பதால் பெட்ரோல் டீசல் விலை கட்டுக்குள் கொண்டுவரப்படும் வரை விலை ஏற்றம் தொடரும் என வியாபாரிகள் தெரிவித்தனர்