பெட்ரோல், டீசல் விலை உயர்வு எதிரொலி... கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை உயர்வு!!

கோடை வெயிலின் தாக்கம் மற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வின் காரணமாக கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு எதிரொலி... கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை உயர்வு!!

கோயம்பேடு சந்தையில் இருந்து அண்டை மாவட்டங்கள் ஆக இருக்கக்கூடிய செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் சென்னையில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு காய்கறிகள் விநியோகம் செய்யப்படுவது வழக்கம். மேலும் அண்டை மாநிலங்களான ஆந்திரா,கர்நாடகா மகாராஷ்டிரா மற்றும் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து கோயம்பேடு சந்தைக்கு காய்கறி வரத்து இருக்கும்.

இந்த நிலையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வின் காரணமாக வெளிமாநிலங்களில் இருந்து வரக்கூடிய லாரிகள் கட்டணம் உயர்ந்துள்ளதால் காய்கறி விலையும் உயர்ந்துள்ளது. மேலும் கோடை வெயிலின் தாக்கம் காரணமாக காய்கறிகள் செடியிலேயே வதங்கி வீணாகிவிடுகிறது. இதுதொடர்பாக செய்தியாளரிடம் பேசிய கோயம்பேடு மொத்த வியாபாரிகள் சங்க தலைவர் ராஜசேகர், கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது.

குறிப்பாக தக்காளி விலை அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. மற்ற காய்கறிகளின் விலையும் கணிசமாக உயர்ந்து கொண்டே இருக்கிறது.

பல்வேறு மாநிலங்களில் இருந்து வரக்கூடிய வரத்து குறைவின் காரணமாகும் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதன் காரணமாக உயர்ந்துகொண்டே இருக்கிறது.

இந்த கோடைகாலத்தில் விலை உயர தான் செய்யும் ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. மற்ற பகுதிகளிலும் மழை பெய்தால் வெயிலின் தாக்கம் சற்று குறையும் விளைச்சல் அதிகம் இருக்கும். வரக்கூடிய நாட்களில் படிப்படியாக குறைய வாய்ப்புகள் இருக்கிறது என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com