தேனி மாவட்டம் பெரியகுளம் RMTC காலனியை சேர்ந்த ஆதிநாராயணன்-ஜெயந்தி தம்பதியரின் மகன் கார்த்திகேயன்.
தந்தை இறந்த நிலையில் தாயுடன் வசித்து வந்த கார்த்திகேயன், கடந்த 2021 ஆம் ஆண்டு துபாயில் வேலைக்காக சென்று அங்கு அவர் பணிபுரியும் நிறுவனத்தினர் பாஸ்போர்ட்டை பெற்றுக் கொண்டு அவருக்கு வேலை கொடுக்காமலும் அலைகழித்துள்ளனர்.
இதன்காரணமாக மாற்று பணிக்கு செல்ல இயலாமலும் வருமானம் இல்லாமலும் உணவுக்காகவும் தங்குமிடத்திற்கு மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளார். நாடு திரும்புவதற்கு தனது பாஸ்போர்ட்டை நிறுவனத்திடம் கேட்டபொழுது அந்நாட்டின் மதிப்பின்படி 52000 (2500 திரகம்ஸ்) செலுத்தினால் மட்டுமே கொடுப்போம் என கூறிவிட்டனர்.
இதனால் வெளிநாட்டில் ஒன்றும் செய்ய இயலாமல் தவித்து வந்துள்ளார். இது தொடர்ந்து கார்த்திகேயனின் தாயார் ஜெயந்தி தேனி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத்திடம் உதவி கேட்டு அணுகி உள்ளார்.
இதைத்தொடர்ந்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தை தொடர்பு கொண்ட ரவிந்திரநாத், எந்த ஒரு செலவும் இன்றி பாஸ்போர்ட்டை கார்த்திகேயனிடம் கொடுக்க வைத்து காலாவதியான பாஸ்போர்ட் என்பதாலும் மீண்டும் வெளியுறவுத் துறை அமைச்சகத்திடம் அணுகி அவசரகால பாஸ்போர்ட் வழங்கப்பட்டு கார்த்திகேயன் நாடு திரும்புவதற்கு உதவியுள்ளார்.
இன்று அதிகாலை நாடு திரும்ப உள்ள கார்த்திகேயன் தனக்கு உதவிய தேனி பாராளுமன்ற உறுப்பினர் ரவிந்திரநாத்திற்கு நன்றி தெரிவித்து சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். வெளிநாட்டில் தவித்த இளைஞரை மீட்ட தேனி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத்துக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.