அத்துமீறும் குடிமகன்கள்.....விழி பிதுங்கும் காவலர்கள்

போதை ஆசாமிகளால் விழி பிதுங்கி நிற்கும் போலீசார்...காவலர்களிடம் மல்லுக்கட்டும் குடிமகன்கள் அத்துமீறி நடக்கும் சம்பவங்களால் கேள்விக்குறியாகும் சட்டம் ஒழுங்கு... நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு...
அத்துமீறும் குடிமகன்கள்.....விழி பிதுங்கும் காவலர்கள்

பொதுவாக மதுபோதையில் குடிமகன்கள் செய்யும் சேட்டைகள் சிரிப்பை வரவழைத்தாலும் சில நேரங்களில் அவர்களின் அத்துமீறல்களால் முகச்சுளிப்பு ஏற்படுகிறது. அண்மைக்காலமாக குடித்துவிட்டு காவலர்களிடமே சேட்டை செய்யும் சம்பவங்கள் தமிழகத்தில் அதிகரித்துள்ளன. இது போன்ற அத்துமீறல்கள் நடக்கும் போதெல்லாம் பெரும்பாலும் காவலர்கள் கை கட்டி வேடிக்கை தான் பார்க்கிறார்கள்... விழி பிதுங்கும் நிலைக்கு காவலர்கள் ஏன் தள்ளப்பட்டார்கள் என்பது தான் கேள்விக்குறி...

Digital

இது போன்ற சம்பவங்களை பார்க்கும் போது நமக்கு முதலில் சிரிப்பு தான் வரும். ஆனால் இந்த சம்பவங்களில் தொடர்புடைய காவலர்களின் நிலையை பார்க்கும் போது நமக்கு ஏகப்பட்ட கேள்விகள் எழத்தான் செய்கின்றன. பொதுவாக காவலர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் வட மாநிலங்களில் தான் நடக்கும். ஆனால் அண்மைக்காலமாக தமிழகத்திலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக இது போன்ற நிகழ்வுகள் தலைதூக்கத் தொடங்கியுள்ளன. அப்படி நடைபெற்ற சில சம்பவங்களை பார்க்கலாம்...

Digital

கொரோனா தொற்று பரவல் இரண்டாம் அலை காரணமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்த காலத்தில் சாலைகளில் தடுப்புகள் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணயில் ஈடுபடுவது வழக்கம். அதே போல் சென்னை சேத்துப்பட்டில் போலீசார் பணியில் இருந்த போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்தக் காரில் இருந்த பெண் முகக்கவசம் அணியாமல் இருந்துள்ளார். இதையடுத்து முகக்கவசம் அணியாததற்கு தண்டம் கட்ட வேண்டும் எனக் காவலர்கள் கூறவும், அந்தப் பெண் தனது தயாருக்கு தகவல் சொன்னார். அங்கு வந்த பெண்ணின் தாயார் என்ன ஏதென்று விசாரிக்காமல் காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நான் யார் தெரியுமா...வழக்கறிஞர். தண்டமெல்லாம் கட்ட முடியாது... உன் சட்டையைக் கழற்றுகிறேன் பார் என அவர் நடந்து கொண்ட விதம்... அப்பப்பா... தங்கல...

Digital

தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் காவலர்களின் கண்ணியத்தை கேலிக் கூத்தாக்கும் வகையில் நடைபெறும் இது போன்ற சம்பவங்களை ஏற்றுக்கொள்ளவும் மனம் மறுக்கிறது.... என்ன செய்யப் போகிறது தமிழக அரசு...

வி.நியூஸ் 27 செய்திகளுக்காக ராய் ...

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com