சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலை நிறுவப்படும் என்று முதலமைச்சர் சட்டசபையில் அறிவித்து இருந்திருந்தார். அதன்படி ரூ.1.56 கோடி மதிப்பீட்டில் சிலை அமைப்பதற்கான பணிகள் நிறைவடைந்து ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநதி சிலை பீடத்தில் நிறுவப்பட்டு திறப்பு விழாவக்கு தாயார் நிலையில் உள்ளது
. நாளை குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு சிலையை திறந்து வைக்க உள்ள நிலையில் ஓமந்தூரார் வளாகம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழ் வாழ்க என்ற பெயர் பலகை ஓமந்தூரார் வளாகத்தில் இருக்கும் நிலையில் கூடுதலாக வண்ண விளக்குகளால் பொறிக்கப்பட்ட தமிழ் வாழ்க என்ற பெயர் பலகை தற்காலிகமாக நிறுவப்பட்டு ஓமந்தூரார் வளாகம் வண்ண ஒளியில் ஜொலிக்கிறது. மேலும் அங்கே உள்ள புல் தரையிலும் தமிழ் வாழ்க என்று பொரிக்கபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.