நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் விவரங்களை அனுப்ப அனைத்து பொதுத்துறை நிறுவனங்களுக்கும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து அனைத்து பொதுத்துறை நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளுக்கு தமிழக அரசின் நிதித்துறை செயலாளர் எழுதியுள்ள கடிதத்தில்,
.பொதுத்துறை நிறுவனங்கள் சார்பாக, பொதுத்துறை நிறுவனங்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகள், நிலுவையில் உள்ள வழக்குகளின் விவரங்களை ஒவ்வொரு மாதம் 10 தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
நிலுவையில் உள்ள வழக்குகளை பொதுத்துறை நிறுவனங்கள் சரியாக கையாளவில்லை என்ற புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. இதனால் அரசுக்கு எதிராக அவமதிப்பு வழக்குகளும் தொடரப்படும் நிலை உள்ளது. நீதிமன்ற அவமதிப்புக்குள்ளாகாமல் அனைத்து வழக்குகளையும் ஒருங்கிணைத்து திறம்பட் எடுத்துச் செல்ல தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை, தற்போதய நிலை, நீண்டகால நிலுவையில் இருக்க காரணம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது