கொசு தடுப்பு புகைப்பரப்பும் வாகனத்தை அமைச்சர்கள் மா.சு, சேகர்பாபு துவக்கி வைப்பு... டெங்கு காய்ச்சலை தடுக்க நடவடிக்கை!!

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் தேசிய டெங்கு தடுப்பு தினம் நிகழ்ச்சி நடைபெற்றது.
அமைச்சர் சேகர்பாபு
அமைச்சர் சேகர்பாபு

இந்த நிகழ்ச்சியில் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபு, செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

. மேலும் இதில், தேசிய டெங்கு தடுப்பு தினத்தை முன்னிட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டதுடன் கொசு தடுப்பு புகைப்பரப்பும் வாகனத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சேகர் பாபு கொடியசைத்து துவக்கி வைத்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்,தமிழ்நாடு முழுவதும் தேசியடெங்குதினம் கடைபிடிக்கப்பட்டுவருகிறது.

மக்களிடம் டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சி இன்றுநடைபெறுகிறது.தமிழகத்தில் ஏற்பட்ட டெங்குபாதிப்பை மனதில்கொண்டு இன்றுவிழிப்புணர்வுநிகழ்ச்சி தொடக்கப்பட்டுள்ளது. கடந்த 2012, 2015, 2017 காலகட்டத்தில் டெங்குவைரஸ்அதிகஉயிரிழப்புகள்ஏற்படுத்தியது.

அதிகபட்சமாகடெங்குவிற்கு 65 பேர் 2017 ஆம் ஆண்டு மரணம் அடைந்தார்கள். இதனால்உள்ளாட்சிஅமைப்புகள்மூலம்வீடுதோறும்சென்றுடெங்குதடுப்புநடவடிக்கைமேற்கொள்ளப்பட்டுவருகிறது. டெங்குகாய்ச்சலைகண்டறிய 125 மையங்கள்இருந்தன.

ஆனால் இன்று 300 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 21000 பணியாளர்கள் டெங்கு தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். கொசுக்களை ஒழிக்க தேவையான மருந்து கையிருப்பில் உள்ளது. 2017 ஆம் ஆண்டு இந்தியாவில் அதிக இழப்பு ஏற்பட்டது. ஆனால் கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் 8 பேர் உயிரிலந்த நிலையில், இந்த 2022 ஆண்டு தொடங்கி 5 மாதங்கள் ஆகியும் இன்னும் உயிரிழப்பு இல்லை.

கிருஷ்ணகிரி, கன்னியாகுமாரி, தருமபுரி மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகமாக உள்ளது. டெங்கு தடுப்பு நடவடிக்கை தொடர்பாக சென்னையில் கடந்த 5 மாதங்களில் 2.5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் சுய டையாலைசிஸ் தேவைப்படுவோரை கண்டறிந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com