காலை ஷிப்ட் பெண்கள் - மாலை ஷிப்ட் ஆண்கள் : கல்லூரி நேரத்தை மாற்றியமைக்க பரிசீலனை - அமைச்சர் பொன்முடி !!

பெண்கல்வியை ஊக்குவிக்க காலை ஷிப்ட் பெண்களுக்கும்,மாலை ஷிப்ட் ஆண்களுக்கும் என்ற அடிப்படையில் கல்லூரி வகுப்புகளை மாற்றியமைக்க அரசு பரிசீலித்து வருவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
பொன்முடி
பொன்முடி

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தி போது பேசிய உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன், தமது தொகுதியில் அரசுக் கல்லூரி அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். இதற்கு பதிலளித்துப் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அரசுக்கல்லூரிகள் இல்லாத தொகுதிகளில் கல்லூரி அமைக்க அரசு முன்னுரிமை அளித்து வருவதாக தெரிவித்தார்.

முன்னதாக வேப்பனஹள்ளி தொகுதியிலும் அரசுக்கல்லூரி அமைத்துத் தர வேண்டும் என அதிமுக உறுப்பினர் கே.பி.

முனுசாமி கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர், அரசியல் பாகுபாடு இல்லாமல் பிற கட்சி உறுப்பினர்களின் கோரிக்கைகளை ஏற்று முதலமைச்சர் அரசு கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், பெண் கல்வியை ஊக்குவிக்க காலை ஷிப்ட் பெண்களுக்கும், மாலை ஷிப்ட் ஆண்களுக்கும் என்ற அடிப்படையில், கல்லூரி வகுப்புகளை மாற்றியமைக்க அரசு பரிசீலித்து வருவதாக தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com