இஸ்லாமியர்களில் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ரமலான் பண்டிகை இன்று தமிழகம் முழுவதும் அனுசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஆலந்தூரில் உள்ள AJS நிதி நிலை பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் ஆண்கள் பெண்கள் என தனித்தனியே தொழுகையில் ஈடுபட்டனர்.
இஸ்லாமியர்கள் தங்கள் புனித கடமைகளில் ஒன்றான நோன்பு கடமையை முடித்துக் கொண்டு தொழுகையை முடித்துக்கொண்டு வெளியே வரும்பொழுது தமிழக சிறு குறு தொழில் துறை அமைச்சரான தா மோ அன்பரசன் இஸ்லாமியர்கள் அனைவருக்கும் பேரிச்சம் பழம் கொடுத்து வரவேற்று வாழ்த்து கூறினார்.