ஆவினில் பணிநியமன முறைகேடு… அதிகாரிகள் மீது விரைவில் நடவடிக்கை… அமைச்சர் நாசர் அதிரடி!!

ஆவினில் பணிநியமன முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.
பால்வளத்துறை அமைச்சர் நாசர்
பால்வளத்துறை அமைச்சர் நாசர்

சென்னை நந்தனதில் உள்ள ஒருங்கிணைந்த கால்நடை பராமரிப்பு மற்றும் மீன் வளத்துறை அலுவலக வளாகத்தில் ஆவின் பாலகத்தை பால்வளதுறை அமைச்சர் சா.மு நாசர் திறந்து வைத்தார்.

சென்னை நந்தனதில் உள்ள ஒருங்கிணைந்த கால்நடை பராமரிப்பு மற்றும் மீன் வளத்துறை அலுவலக வளாகத்தில் ஆவின் பாலகத்தை பால்வளதுறை அமைச்சர் சா.மு நாசர் திறந்து வைத்தார்.

நெய் வெண்ணெய் சாக்லேட் பால்பவுடர் , பாயசம் நூடில்ஸ் உள்ளிட்ட பொருட்களை ரேஷன் கடைகளில் விற்பனை செய்ய திட்டமிட்டு உள்ளோம் விரைவில் இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வருகிறது. கோடைகாலம் என்பதால் ஆவின் பொருட்களின் விற்பனை அதிகரித்துள்ளது.

ஆவினில் பணிநியமன முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் காலி பணியிடங்கள் டி.என்.பி.எஸ்.சி மூலம் நிறப்பப்படும் என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com