மருத்துவ காப்பீடு அட்டை பதிவு செய்யும் மையம்... திறந்து வைத்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியம்!!

மருத்துவ காப்பீடு அட்டை பதிவு செய்யும் மையம்... திறந்து வைத்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியம்!!

சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே அமைக்கப்பட்ட முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மற்றும் மருத்துவ காப்பீடு அட்டை பதிவு செய்யும் மையத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஏழை எளியோர் பயன் பெறுவதற்காக 2009 ஆம் ஆண்டு முதல்வர் காப்பீட்டு திட்டம் கொண்டு வரப்பட்டது. கடந்த 13 ஆண்டுகளில் 1,12,65,062 பயனாளிகள் 10,388 கோடி ரூபாய்க்கு காப்பீட்டு தொகையில் பயனடைந்துள்ளனர். தற்போது வரை 1 கோடி 37 லட்சம் குடும்பங்கள் தற்போது இத்திட்டத்தின் பங்காளிகளாக உள்ளனர். இக்குடும்பங்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு ஐந்து லட்ச ரூபாய் வரை காப்பீடு வழங்கப்படுகிறது.

800 அரசு மருத்துவமனை 900 தனியார் மருத்துவமனை என 1700 மருத்துவமனைகளில் இத்திட்டம் அங்கீகரிக்கப்படுகிறது. இந்த 5 ஆண்டுக்கு முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்திற்கு 7730 கோடி ஒதுக்கீடு செய்து, முதலமைச்சர் அதற்கு கையெழுத்திட்டுள்ளார். மொத்தம் 1090 சிகிச்சை முறை இந்த திட்டத்தின் கீழ் சிகிச்சை வழங்கப்படுகிறது. காப்பீடு திட்டத்தின் கீழ் கரோனா சிகிச்சையும் கொண்டு வரப்பட்டு உள்ளது.

மேலும் இன்னுயிர் காப்போம் திட்டம் 640 மருத்துவமனைகளில் செயல்பட்டு வருகிறது. 4 மாதத்தில் 63,515 இத்திட்டம் மூலம் பயன் அடைந்துள்ளனர். ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதல்வரின் காப்பீட்டு அட்டை பதிவு செய்யும் மையம் உள்ளது. மக்கள் சிரமத்தை போக்க முதல்வர் காப்பீட்டு திட்டம் அட்டை பெறுவதற்காக சிறப்பு அலுவலகத்தை திறக்க முதல்வர் உத்தரவிட்டார்.

அதன்படி சைதாப்பேட்டையில் தொடங்கப்பட்டது. தென் சென்னையில் உள்ளவர்கள் அங்கு வந்து பயன்பட்டன தற்போது இங்கு தொடங்கப்பட்டுள்ளது. மேலும் வட சென்னையில் திறப்பதற்கான இடத்தை தற்போது தேர்வு செய்யப்பட்டு வருகிறது. மதுரை, கோவை உள்ளிட்ட பெரிய மாவட்டங்களில் இதுபோன்று கூடுதல் காப்பீட்டு அட்டை பதிவு மையத்தை திறப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com