தஞ்சாவூரில் நள்ளிரவில் நிகழ்ந்த துயரம்... 11 பேர் பலி

தஞ்சையில் தேர்த்திருவிழாவின் போது மின்சாரம் தாக்கியதில் 2 சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர். ஆபத்தான நிலையில் 4 பேர் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தஞ்சாவூரில் நள்ளிரவில் நிகழ்ந்த துயரம்... 11 பேர் பலி

தஞ்சாவூர் அருகே களிமேடு பகுதியில் அப்பர் குருபூஜை 94 ஆம் ஆண்டு விழா நேற்று இரவு வெகு விமரிசையாக நடைபெற்று வந்தது. அப்போது தேரினை அப்பகுதி மக்கள் வடம் பிடித்து இழுத்து வந்த நிலையில்.

அங்கு மேலே சென்ற உயர் அழுத்த மின்சார கம்பியின் மீது தேர் உரசியதில் தேரின் மீது மின்சாரம் தாக்கி 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.இதில் இரண்டு 2 சிறுவர்கள் அடக்கம். மேலும் பத்துக்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் 3 பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

தேரினை எடுத்து இழுத்து வரும் போது அப்பகுதியில் தண்ணீர் இருந்ததாகவும், அதனால் சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் தேரினை விட்டு தள்ளி நின்றதால் மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டு உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். தேரின் போது 11 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com