நாளை திறக்கப்படுகிறது மேட்டூர் அணை.... முதல்வர் திறந்து வைக்கிறார்

மேட்டூர் அணை திறப்பு மற்றும் பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்ற நாளை பிற்பகல் 3மணியளவில் விமானம் மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலம் செல்கிறார்.
நாளை திறக்கப்படுகிறது மேட்டூர் அணை.... முதல்வர் திறந்து வைக்கிறார்

சேலம் வருகை தரும் முதலமைச்சருக்கு, தீவட்டிப்பட்டியில் பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சியும், அடுத்து தொப்பூர் வழியாக மேச்சேரி, மேட்டூர் செல்லும் வழிகளில் பிரம்மாண்ட வரவேற்பிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தொடந்து நாளை இரவு மேட்டுரில் தங்கும் முதல்வர், 24ம் தேதி காலை திருச்சி மற்றும் டெல்டா மாவட்டங்களில் விவசாய தேவைக்காக மேட்டூர் அணையை திறந்து வைக்கிறார்.

பின் மேட்டுரிலிருந்து மேட்டூர் RS, குஞ்சாண்டியூர், நங்கவள்ளி, சேலம் உருக்காலை, சேலம் மாநகர் புறவழிச்சாலை வழியாக வாழப்பாடி சென்று ஆத்தூர் செல்லியம்பாளையத்தில் ஓயாத உழைப்பின் ஓராண்டு சாதனை விளக்க பிரம்மாண்டமான பொதுக் கூட்டத்தில் பிற்பகல் 2.00 மணிக்கு கலந்து கொண்டு உரையாற்றிவிட்டு சென்னை திரும்புகிறார்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com