88 ஆண்டு கால வரலாற்றில் முன்கூட்டியே திறக்கப்படும் மேட்டூர் அணை

குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீரை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
88 ஆண்டு கால வரலாற்றில் முன்கூட்டியே திறக்கப்படும் மேட்டூர் அணை

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையிலிருந்து ஆண்டுதோறும் ஜுன் 12ம் தேதி தண்ணீர் திறந்துவிடப்படுவது வழக்கம். இந்த அணை கட்டப்பட்ட 88 ஆண்டுகளில் இதுவரை 18 முறை மட்டுமே குறித்த நேரத்தில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த சிலநாட்களாக கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து 117 அடியை எட்டியது. இதனையடுத்து, குறுவை சாகுபடிக்காக முன்னதாகவே மே 24ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

88 ஆண்டு கால மேட்டூர் அணை வரலாற்றில், ஜீன் 12ம் தேதிக்கு முன்பே சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.

அதன்படி, இன்று மேட்டூர்அணை யிலிருந்து தண்ணீரை முதலமைச்சர் திறந்து வைக்கவுள்ளார். இதற்காக சென்னையிலிருந்து விமானம்மூலம் சேலம்வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, சாலையின் இருமருங்களிலும் பொதுமக்களும், தொண்டர்களும் திரண்டுவந்து உற்சாகவரவேற்பு அளித்தனர்.

முதலமைச்சரின் வருகையொட்டி, மேட்டூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேட்டூர் அணை இன்று திறக்கப்படுவதன் மூலம் சேலம் துவங்கி நாகை வரை 12 காவிரி டெல்டா மாவட்டங்களில் 16 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற உள்ளன. மேட்டூர் அணை முன்கூட்டியே திறந்து விடப்படுவதால் டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com