மே.8 மெகா தடுப்பூசி முகாம்… அறிவித்தார் அமைச்சர் மா.சுப்ரமணியன்!!

தமிழகத்தில் மே 8 ஆம் தேதி 1 லட்சம் இடங்களில் சிறப்பு மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மா.சுப்பிரமணியன்
மா.சுப்பிரமணியன்

சென்னை மாமன்ற உறுப்பினர்களுக்கான நிர்வாக பயிற்சி முகாம் ரிப்பன் மாளிகை அம்மா அரங்கில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கொரான பரவல் இந்தியா முழுவதும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

டெல்லி, உ.பி.யில் நூற்றுக்கணக்கில் உயர்கிறது. உலகளவில் தொற்று அச்சம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் பாதுகாப்பான சூழல் அவசியம், நேற்று ஐஐடியில் 3 பேருக்கு தொற்று என்றவுடன் உடனே அனைத்து மாணவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

ஐஐடியில் 15, 16 பேருக்கு கொரான தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வட மாநிலங்களில் இருந்து சென்னை வந்த தொழிலாளர்களுக்கு கொரானா ஏற்பட்டுள்ளது. வட மாநில தொழிலாளர்கள் குழு குழுவாக வருகின்றனர்.

தொழிலாளர்களை அழைத்து வரும் நிறுவனங்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் , அதன் மூலம் தொழிலாளர்களுக்கு இலவச ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்படும் , தொழிலாளர்களுக்கு இலவச தடுப்பூசியையும் தமிழக அரசு செலுத்தும். தமிழகத்தில் கொரான பாதிப்பு 21 நபர்கள் வரை இறங்கி வந்தது , கொரானா முடிந்து விட்டது என நினைத்த நிலையில் தற்போது 30 ஐ தாண்டியுள்ளது

மே மாதம் 8 ம் தேதி சிறப்பு மெகா கொரோனா தடுப்பூசி முகாமை தமிழகம் முழுவதும் 1 லட்சம் இடங்களில் நடத்த உள்ளோம். முதல் தவணை செலுத்திக் கொள்ளாத 54 லட்சம் பேர் , இரண்டாம் தவணை செலுத்தாமல் உள்ள 1கோடியே 46 லட்சம் பேர் என ஏறக்குறைய 2 கோடி பேரை மனதில் வைத்து இந்த தடுப்பூசி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல் தவணை செலுத்தாமல் உள்ளோரை தனித்தனியே வீடு தேடி சென்று சந்தித்து 8ம் தேதி தடுப்பூசி செலுத்த வேண்டுகோள் விடுப்போம் என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com