மே.5 தொடங்குகிறது பொதுத்தேர்வு… தேர்வறைகளை தயார் செய்யும் பணியில் ஆசிரியர்கள் தீவிரம்!!

இரு தினங்களில் பொதுத்தேர்வுகள் தொடங்க உள்ள நிலையில் தேர்வறைகளை தயார் செய்யும் பணியில் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மே.5 தொடங்குகிறது பொதுத்தேர்வு… தேர்வறைகளை தயார் செய்யும் பணியில் ஆசிரியர்கள் தீவிரம்!!

மே 5 ஆம் தேதி முதல் 10,11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ளது இன்னும் இரு தினங்களில் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் மாணவர்கள் தேர்வு எழுத வசதியாக வகுப்பறைகளை தேர்வு அறைகளாக மாற்றுவதற்கு தேவையான பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

தேர்வறைகளை நன்றாக சுத்தம் செய்து ஒரு அறையில் 20 பேர் மட்டுமே அமரக்கூடிய வகையில் அமைக்கப்பட்டு வருகிறது. மாணவர்கள் அமரும் மேசை முன்பு அவர்களின் பதிவு எண்கள் எழுதி ஒட்டப்பட்டு வருகிறது.

10ம் வகுப்பு பொதுத் தேர்வு 9 லட்சத்து 55 ஆயிரத்து 474, மேல்நிலை முதலாம் ஆண்டு 8 லட்சத்து 83 ஆயிரத்து 884, 12ஆம் வகுப்பு 8 லட்சத்து 37 ஆயிரத்து 317 என ஆக மொத்தம் 26 லட்சத்து 76 ஆயிரத்து 675 மாணவ மாணவிகள் பொதுத் தேர்வு எழுத உள்ளனர்.

இதற்காக மாநிலம் முழுவதும் 3 ஆயிரத்து 119 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா பிரச்சனை காரணமாக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தேர்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com