
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மீண்டும் மஞ்சப்பை இயக்கத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், 10 ரூபாய் நாணயம் போட்டால் மஞ்சப்பை வெளிவரும் இயந்திரத்தை பேருந்து நிலையங்கள், இரயில் நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் பொது இடங்களில் வைக்க ஏற்பாடுகள் நடைப்பெற்று வருகிறது.
பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக மஞ்சள் பைகளை பயன்படுத்தும் விதமாக, மீண்டும் மஞ்சப்பை இயக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து மஞ்சப்பை பயன்பாட்டை அதிகரிக்கச் செய்யும் பணிகளில் சுற்றுச்சூழல் துறை தீவிரமாக பணியாற்றி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக பொது இடங்களில் நாணயம் போட்டால் மஞ்சப்பை வரும் இயந்திரம் வைக்கும் பணி தமிழ்நாடு அரசின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது எறு தெரிவித்தார்.