200-க்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு... மக்கள் ஹேப்பி

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 200-க்கும் கீழ் குறைந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
200-க்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு... மக்கள் ஹேப்பி

தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் தற்போதைய நிலவரம் தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் நேற்று மட்டும் 196 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 51 ஆயிரத்து 13 ஆக அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் நேற்று 62 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவையில் 25 பேருக்கும், செங்கல்பட்டில் 20 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே சமயம், நேற்று ஒரே நாளில் 554 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 10 ஆயிரத்து 228 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பினால் நேற்று மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 38 ஆயிரத்து 15 ஆக உயர்ந்துள்ளது. மாநிலம் முழுவதும் இரண்டாயிரத்து 770 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com