கோட நாடு கொலை, கொள்ளை வழக்கு… சசிகலாவிடம் தீவிர விசாரணை!!

கோட நாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சுமார் 3 மணி நேரத்திற்கும் மேல் சசிகலாவிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கோட நாடு கொலை, கொள்ளை வழக்கு… சசிகலாவிடம் தீவிர விசாரணை!!

நீலகிரி மாவட்டம் கோடநாட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவிற்கு சொந்தமான எஸ்டேட் அமைந்துள்ளது. ஜெயலலிதா மறைவிற்கு பிறகு கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கோட நாடு பங்களாவில் புகுந்த கும்பல் ஒன்று காவலாளி ஓம்பகதூரை கொலை செய்து விட்டு முக்கிய பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.

இந்த கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக கோத்தகிரி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். இது தொடர்பாக மனோஜ், சயான் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் இந்த வழக்கில் போலீசார் தேடி வந்த ஜெயலலிதாவின் கார் ஓட்டுனர் கனகராஜ் 2017 ஆம் ஆண்டு சேலத்தில் சாலை விபத்தில் உயிரிழந்தார்.

மேலும் கோடநாடு எஸ்டேட்டில் கணினி ஆப்ரேட்டராக பணிப்புரிந்து வந்த தினேஷ் தற்கொலை செய்து கொண்டது என அடுத்தடுத்து பல சந்தேகங்களை கிளப்பியது. இந்த கொலை,கொள்ளை தொடர்பான வழக்கு நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த வழக்கு தொடர்பாக கோட நாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன், சசிகலாவின் உறவினர் விவேக் ஜெயராமன், முன்னாள் எம்.எல்.ஏ ஆறுகுட்டி உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இந்நிலையில் கோட நாடு எஸ்டேட்டின் உரிமையாளரின் ஒருவரான ஜெயலலிதாவின் தோழி சசிகலாவிடம் விசாரணை நடத்த தனிப்படை போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர்.

வயது மூப்பின் காரணமாக ஐஜி சுதாகரன் தலைமையிலான போலீசார் சென்னை தியாகராய நகரில் உள்ள சசிகலா வீட்டிற்கு நேரிடையாக சென்று விசாரணை செய்ய முடிவு செய்தனர்.

அதனடிப்படையில் இன்று காலை 10.55 மணியளவில் ஐஜி சுதாகரன் தலைமையில் ஆஷித் ராவத் , ஏடி.எஸ் பி கிருஷ்ணமூர்த்தி, இரு பெண் போலீசார் உட்பட 8 பேர் சசிகலாவின் வீட்டிற்கு வந்து விசாரணை நடத்தினர்.

சுமார் 100க்கும் மேற்பட்ட கேள்விகள் சசிகலாவிடம் ஐஜி சுதாகரன் கேட்டதாக கூறப்படுகிறது. சசிகலா அளிக்கக்கூடிய வாக்குமூலத்தை வீடியோ பதிவு செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. 3 மணி நேரத்திற்கும் மேலாக சசிகலாவிடம் விசாரணை நடைபெற்றது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com