கபாலீஸ்வரர் கோவில் மயில் சிலை வழக்கு... மீண்டும் தொடங்கியது தேடும் பணி!!

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் தெப்பக்குளத்தில் சிலைகள் தேடும் பணியில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஈடுபட்டுள்ளது.
கபாலீஸ்வரர் கோவில் மயில் சிலை வழக்கு... மீண்டும் தொடங்கியது தேடும் பணி!!

கடந்த 2004 ஆம் ஆண்டு கபாலீஸ்வரர் கோவிலில் உள்ள மயில் சிலை திருட்டு போனது தொடர்பாக 2018 ஆம் ஆண்டு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த வழக்கை விரைவாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என சென்னை நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மயிலாப்பூர் தெப்பக்குளத்தில் சிலைகள் வீசப்பட்டு இருக்கலாமென சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கடந்த மார்ச் மாதம் 14ஆம் தேதி தீயணைப்புத் துறை உதவியுடன் தீவிர தேடுதலில் ஈடுபட்டனர்.

குளத்தில் ஆழமாக சென்று முழுவதும் தேட முடியாத காரணத்தினால், தேசிய கடல் ஆராய்ச்சி நிறுவனத்தின் உதவியை நாடினர். சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தீயணைப்பு துறை மற்றும் தேசிய கடல்சார் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியோர் இணைந்து அதிநவீன கருவிகளைக் கொண்டு தெப்பக்குளத்தில் மயில் சிலை, ராகு, கேது சிலைகளை தேடினர்.

கருவிகளைக் கொண்டு தெப்பக்குளத்தில் மயில் சிலை, ராகு, கேது சிலைகளை தேடினர். இந்த நிலையில் இன்று மீண்டும் தெப்பக்குளத்தில் தீயணைப்பு துறையினரின் உதவியோடு சிலைகளை தேடும் பணியில் தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் தற்போது ஈடுபட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com