தமிழகத்தில் கொரொனா பாதிப்பு கடந்த ஒரு மாத காலமாக குறைந்து வந்த பாதிப்பு கடந்த சில நாட்களாக சற்று அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தமிழக சுகாதாரத்துறை சார்பில் அனைத்து மாவட்டங்களுக்கும் கடிதம் ஒன்றை சுகாதாரத்துறை செயலாளர் அனுப்பியிருந்தார்.
அதில், தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு குறைவாக இருந்தாலும் அருகே இருக்கக்கூடிய டெல்லி மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு தமிழகத்திலும் சற்று அதிகரித்து வருகிறது.
மேலும் இதனை அதிகரிக்காமல் தடுக்க பொதுமக்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் ஆன முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். மேலும் தமிழகத்தில் இதுவரையிலும் முதல் தவணை தடுப்பூசி மட்டும் ஐம்பத்தி ஒரு லட்சம் பேரும் அதைப்போல இரண்டாம் தவணை தடுப்பூசி ஒரு கோடியே 40 லட்சம் பேரும் செலுத்தாமல் உள்ளனர்.
இந்த நிலையில் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாமல் இருப்பவர்கள் உடனடியாக செலுத்திக் கொள்ள முன்வர வேண்டும். அதேபோல பூஸ்டர் டோஸ் தடுப்பு ஊசி செலுத்தாமல் இருப்பவர்கள் அரசு மருத்துவமனையில் முன் களப்பணியாளர்கள், மருத்துவ பணியாளர்கள் அதேபோல 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில் அங்கு வந்து அனைவரும் பூஸ்டர் தடுப்பூசி சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இந்த நிலையில் பெரும்பாலான பொது மக்கள் முக கவசத்தை முழுமையாக தவிர்த்து இயல்பு நிலையில் உள்ளனர். எனவே தொற்று சற்று அதிகரித்து வரும் நிலையில் முறையாக விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.