பொதுத்தேர்வுக்கு மாணவர்கள் பிட் எடுத்துச் சென்ற விவகாரம்... தேர்வுப்பணியில் ஈடுபட்ட 11 ஆசிரியர்கள் விடுவிப்பு!!

பொதுத்தேர்வுக்கு மாணவர்கள் பிட் எடுத்துச் சென்ற விவகாரம்... தேர்வுப்பணியில் ஈடுபட்ட 11 ஆசிரியர்கள் விடுவிப்பு!!

நாமக்கல் மாவட்டத்தில் பொதுத்தேர்வுக்கு மாணவர்கள் மினி ஜெராக்ஸ் பிட் எடுத்துச்சென்ற விவகாரத்தில், பள்ளியில் முறையாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்காத தேர்வுப்பணியில் ஈடுபட்ட தலைமையாசிரியர் உட்பட 11 ஆசிரியர்களை தேர்வுப்பணியில் இருந்து விடுவித்து தேர்வுகள் இயக்ககம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் 10,11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு கடந்த 5 ந் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. பொதுத் தேர்வினை கண்காணிக்க ஐஏஎஸ் அதிகாரிகள், பள்ளிக் கல்வித்துறையின் இயக்குனர்கள், இணை இயக்குனர்கள் மாவட்டங்களுக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மாணவர்கள் தேர்வில் முறைகேடான செயலில் ஈடுப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அதற்கான தண்டனைகளும் பள்ளிக்கல்வித்துறையால் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன.

நாமக்கல் மாவட்டத்திற்கு தேர்வு கண்காணிப்பு அலுவலராக தேர்வுத்துறை இணை இயக்குனர் பொன்.குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் கடந்த 16 ந் தேதி நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் ஆய்வுக்கு சென்றபோது ஜெராக்ஸ் கடையில் மாணவர்கள் 11ம் வகுப்பு தேர்விற்கு முன்னதாக மைக்ரோ ஜெராக்ஸ் போட்டு எடுத்துச்செல்வதை பார்த்தார்.

அதனைத் தொடர்ந்து செங்கரை அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப்பள்ளியின் தேர்வு முதன்மைக் கண்காணிப்பாளருக்கு அறிவுரை கூறி மாணவர்களிடம் இருந்த பிட் பேப்பர்கள் அனைத்தும் தேர்விற்கு முன்னதாகவே பறிமுதல் செய்யப்பட்டது.

ஜெராக்ஸ் கடையில் இதுபோன்ற பணிகளை செய்தால் மூடுவோம் எனவும் தேர்வுத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தொடர்ந்து நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம், குமாரப்பாளையம் பள்ளிகளில் கடந்த 12ம் தேதி ஆய்வு செய்தப் போது, தேர்வு துவங்குவதற்கு முன் மாணவர்களிடம் இருந்த பிட் பேட்பர்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த விவகாரத்தில் முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்காத தேர்வு பணியில் ஈடுபட்டிருந்த தலைமை ஆசிரியர் உட்பட 11 ஆசிரியர்களை தேர்வு பணியில் இருந்து விடுவித்து, மாற்று தேர்வு கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டு பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், தேர்வுக்கு முன்பாகவே பிட் பேப்பர்கள் பிடிக்கப்பட்டதால், மாணவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என்றும் அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

அனைத்து தேர்வு மையங்களிலும், பள்ளிகளுக்கு அருகிலுள்ள ஜெராக்ஸ் கடைகளில் இதுபோன்று மினி ஜெராக்ஸ் மாணவர்கள் எடுத்து வருகின்றார்களா என்பதை தேர்வுப்பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் முறையாக ஆய்வு செய்ய வேண்டுமெனவும் தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com