கடத்தல் தளமாக மாறுகிறதா விமான நிலையம்... ?

துபாயில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ. 1 கோடியே 46 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ 935 கிராம் தங்கம், மின்சாதன பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடத்தல் தளமாக மாறுகிறதா விமான நிலையம்... ?

சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு வரும் விமானங்களில் பெரும் அளவு தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்கத்துறை கமிஷனர் உதய் பாஸ்கருக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் சுங்கத்துறை அதிகாரிகள் துபாயில் இருந்து வந்து விமானத்தில் பயணம் செய்தவர்களை கண்காணித்தனர்.

அப்போது திருச்சியை சேர்ந்த அப்துல் பாசித் (32), சிவகங்கையை சேர்ந்த சாகுல் அமீது(34), தேனியை சேர்ந்த சரவணன்(33) ஆகிய 3 பேரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் உடமைகளை சோதனை செய்தனர்.

அதில் அப்துல் பாசித் பழைய ஒலி பெருக்கி வைத்திருந்தார். அதை பிரித்து பார்த்த போது அதில் டிரான்ஸ்பார்மரில் தங்கத்தை மறைத்து வைத்து இருந்ததை கண்டு பிடித்தனர். அதுப்போல் சரவணன், சாகுல் அமீது ஆகியோர் உடமைகளுக்கு நடுவே தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். இவர்களிடம் இருந்து வெளிநாட்டு சிகரெட்டுகள், ஐபோன்கள், மின்சாதன பொருட்கள் ஆகியவை இருந்தன

3 பேரிடம் இருந்து ரூ. 1 கோடியே 46 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ 935 கிராம் தங்கம், சிகரெட்டுகள், ஐபோன்கள், மின்சாதன பொருட்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com