உயிர்மேல் அக்கறை இருந்தால் மாஸ்க் போடுங்கள்... அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தல்!!

தமிழகத்தில் பொது இடங்களுக்கு செல்லும் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அனிய வேண்டும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்
மா.சுப்பிரமணியன்
மா.சுப்பிரமணியன்

சென்னை சைதாப்பேட்டை மாநகர போக்குவரத்து கழக பணிமனையில் புதிதாய் கட்டப்பட்ட தொழிலாளர் ஓய்வு அறையை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் ஆகியோர் திறந்து வைத்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா தொற்று தற்போது அதிகரித்து வருகிறது. இந்தியாவில் டெல்லி உத்தரப்பிரதேசம் மராட்டியம், கேரளா போன்ற மாநிலங்களில் தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் அந்த மாநிலங்களுக்கு எச்சரிக்கையாக இருக்கும்படி மத்திய அரசு கடிதம் எழுதி உள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தை பொருத்த வரையில் பொது இடங்களுக்கு செல்லும் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அனிய வேண்டும்.

தமிழகத்தை பொருத்த வரையில் பதட்டமான சூழ்நிலை இல்லை என்றாலும் பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும். கடந்த ஒரு மாதமாக 0 என்ற அளவில் தமிழகத்தில் இறப்பு சதவீதம் உள்ளது. இன்னுயிர் காப்போம் திட்டத்தில் உயிர் இழப்பை தவிர்ப்பது தான் முக்கியம்.

அருகில் அரசு மருத்துவமனை இருந்தும் அதை தவிர்த்து தொலைவில் இருக்கக்கூடிய தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றால் அந்த மருத்துவமனை நிர்வாகம் மற்றும் ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் உயிர் மேல் அக்கறை இருந்தால் மக்கள் முக்கவசம் அணிய வேண்டும் என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com