பெற்றோர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆசிரியர்கள் அடங்கிய பள்ளி மேலாண்மை குழுவை அமைப்பதற்கான கூட்டம் இன்று தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது.
ஜனநாயக முறைப்படி பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர் இரண்டு நாட்களுக்கு முன்னதாக தமிழக முதலமைச்சர் சென்னை திருவல்லிக்கேணியில் லேடி வெலிங்டன் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இந்த நிகழ்வை துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் இன்று இந்நிகழ்வு நடைபெற இருக்கிறது.
அதன் காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள நடுநிலை பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப் பட்டிருக்கிறது பள்ளி மாணவர்கள் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெறுவதால் பள்ளிக்கு வர வேண்டிய அவசியம் இல்லை என்றும் ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.