தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கொட்டப்போகிறது கனமழை... வானிலை மையம் எச்சரிக்கை!!

தமிழகம் முழுவதும் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கொட்டப்போகிறது கனமழை... வானிலை மையம் எச்சரிக்கை!!

வங்க கடலில் உருவான தீவிர புயல் அசானி, கடந்த ஆறு மணி நேரத்தில் மணிக்கு 7 கிலோ மீட்டர் வேகத்தில் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ளது. இது தொடர்ந்து இன்று இரவு வரை வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஆந்திரா அதனை ஒட்டிய ஒடிசா கடற்கரை அருகே மத்திய மேற்கு வங்க கடலில் நிலைகொள்ளும்.

அதன்பிறகு திசையில் மாற்றம் ஏற்பட்டு வடக்கு - வடகிழக்கு திசையில் நகர்ந்து வட மேற்கு வங்க கடல் பகுதியில் வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசா கடற்கரை அருகே கரையை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வரும் 24 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுவிழக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், தீவிர புயல் அசானியின் வெளிப்புற மேகங்கள் காற்றின் திசைக்கு ஏற்ப நிலப்பரப்பிற்குள் வருகின்றன.

தமிழ்நாட்டின் வட மாவட்டங்கள் மீதும் வருவதினால் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்துள்ளது. இது மேலும் தொடரக்கூடிய வாய்ப்பு உள்ளதால் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே சென்னை மெரினா கடற்கரை சாலை, அண்ணா சாலை, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர் பகுதிகளில் காற்றுடன் கனமழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com