கடந்த மே 4ஆம் கத்திரி வெய்யில் தொடங்கி ஒருவாரம் ஆகிய நிலையில் வாட்டிவதைத்த வெய்யினால் மக்கள் மிகுந்த அவதிகுள்ளாயினர்.
இருப்பினும் சென்னை வானிலை மையம் ஆசானிக் புயல் வந்ததையடுத்து தமிழகத்தில் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வந்தது இருப்பினும் சென்னை வானிலை ஆய்வு மையம் மேலும் ஒரு வாரத்திற்கு ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என்று அறிவித்த நிலையில் தாம்பரம், சேலையூர், பல்லாவரம், பம்மல், சிட்லபாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 1 மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்து வருகிறது.
காலை முதல் வெயிலின் தாக்கம் சற்று அதிக தீயில் இருந்து நிலையில் மதிய வேளைக்கு பின்பு கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்ய தொடங்கியது சற்றும் எதிர்பாராத இருசக்கர வாகன ஓட்டிகள் மழையில் நனைந்தவாறே இருசக்கர வாகனம் ஓட்டிச் செல்கின்றனர்.
மழையின் காரணமாக பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தாலும் சற்று இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.