தலைக்கேறிய மதுபோதை... லாரியில் இருந்து கீழே விழுந்து கிளீனர் பலி!!

லாரி மீது அமர்ந்து மது அருந்தும் போது தடுமாறி கீழே விழுந்த கிளீனர் பலியானது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தலைக்கேறிய மதுபோதை... லாரியில் இருந்து கீழே விழுந்து கிளீனர் பலி!!

ஆந்திர பிரதேச மாநிலம் கர்னூல் மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜ். இவர் லாரி கிளீனராக பணிபுரிந்து வந்தார்.

இவர் வெங்காயம் லோடு இறக்குவதற்காக லாரியில் ஆந்திராவில் கோயம்பேடு மார்க்கெட்டிற்கு வந்தார். பின்னர் லோடு ஏற்றி வந்த லாரி மீது அமர்ந்து ராஜ், லாரி ஓட்டுநர் பங்காரப்பா, இவரது நண்பர்கள் கிருஷ்ணன், மகேஷ் ஆகிய 4 பேரும் ஒன்றாக இணைந்து மது அருந்தி வந்தனர்.

அப்போது போதையில் இருந்த ராஜ் திடீரென நிலைதடுமாறி பின்புறமாக லாரியிலிருந்து கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த ராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து கோயம்பேடு போலீசாருக்கு அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உயிரிழந்த ராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ராஜ் லாரியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com