குட்கா, பான் மசாலா, புகையிலை தயாரித்தல், விநியோகித்தலுக்கான தடை நீட்டிப்பு... தமிழக அரசு அதிரடி!!

தமிழகத்தில் குட்கா, பான் மசாலா மற்றும் புகையிலை பொருட்கள் தயாரித்தல், விநியோகித்தல், பதுக்குதல் போன்றவற்றுக்கு மேலும் ஓராண்டுக்கு தடை விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது
குட்கா, பான் மசாலா, புகையிலை தயாரித்தல், விநியோகித்தலுக்கான தடை நீட்டிப்பு... தமிழக அரசு அதிரடி!!

நிகோடின் மற்றும் புகையிலை அடிப்படையிலான குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மனித உடலுக்கு மிகவும் கேடு விளைவிக்கும் என்பதால், தமிழகத்தில் இவற்றை தயாரிக்கவும், விற்பனை செய்யவும் கடந்த 2011ம் ஆண்டு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்த இந்த தடை கடந்த மே 23ம் தேதியுடன் முடிவுக்கு வந்ததையடுத்து, தடையை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தமிழ்நாடு அரசு அரசிதழ் வெளியிட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com