மக்கள் அதிகாரம் அமைப்பினரால் ஆளுநர் மாளிகை முற்றுகை… ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கண்டனம்!!

ஆளுநர் ஆர்.என்.ரவி
ஆளுநர் ஆர்.என்.ரவி

ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து மக்கள் அதிகாரம் அமைப்பினர் சென்னை ஆளுநர் மாளிகை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், இந்த போராட்டத்தில் விடுதலை சிறுத்தை கட்சி, எஸ்.டி பி.ஐ உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் இயக்கங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் அதிகாரத்தின் பொது செயலாளர் ரவி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசிற்கு தொல்லை கொடுக்கவே திட்டமிட்டு தமிழ்நாட்டில் மோடி, அமித்ஷா ஆகியோரால் திணிக்கப்பட்டுள்ளார். பதவியேற்ற நாளில் இருந்தே மாநில உரிமைகளுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார்.

பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை அரசு நிர்வாகத்தில் தலையிட்டு செயல்படுவது போல, தமிழக ஆளுநரும் அரசு நிர்வாகத்தில் தலையிட்டு செயல்படுகிறார்.

அதேபோல, மக்களால் தேர்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு, 7 பேர் விடுதலை உள்ளிட்ட 19 மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் கிடப்பில் போட்டு தமிழக அரசை வழியில் முடக்கும் செயலில் ஈடுபட்டு வருகிறார்.

மக்கள் விரோத பாஜக அரசு இந்துத்துவ அரசியலை, இஸ்லாமிய வெறுப்பு அரசியலை அமைதியாக இருக்கும் தமிழகத்தில் கொண்டு வர வேண்டும், மக்கள் மத்தியில் வட இந்தியாவில் கலவரத்தை தூண்டுவதை போல, தமிழகத்தில் கொண்டுவர நினைத்து செயல்படுகிறது என்று தெரிவித்தார்

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com