தகவல் தொழில்நுட்பத் துறையின் சார்பில் அன்னிய முதலீடுகள் ஈர்க்கப்படும்

லண்டனில் நடைபெற உள்ள தொழில் முனைவோருக்கான உச்சி மாநாட்டில் பங்கேற்ப்பதற்க்காக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் லண்டன் பயணம் மேற்கொண்டுள்ளார்.
தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ்
தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ்

உலக தமிழர் பேரவை சார்பில் நடத்தப்படும் தொழில் முனைவோருக்கான உச்சி மாநாடு லண்டனில் நடைபெற உள்ளது இந்த உச்சி மாநாட்டிற்கு தமிழ்நாடு அரசு சார்பில் 5 நாள் பயணமாக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொள்கிறார் இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இன்று அதிகாலை சென்னை பன்னாட்டு விமான நிலையம் வந்தடைந்தார். அங்கு அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களிடம் பேசியதாவது,

முதல்வர் அறிவித்துள்ள ஒரு டிரில்லியன் அமேரிக்க டாலர் வருவாய் இலக்கை எட்டும் வகையிலும் தகவல் தொழில்நுட்பத் துறையின் சார்பில் அன்னிய முதலீடுகளை ஈர்க்கும் வகையிலும் லண்டனில் நடைபெற உள்ள தொழில் முனைவோருக்கான உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளேன்.

இந்த உச்சி மாநாட்டில் அதிகமான தொழில் முனைவோர்களை ஈர்த்து தமிழ்நாட்டில் தொழில் முதலீட்டை பெருக்குவது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளவுள்ளோம். தமிழ்நாட்டில் பொருளாதார ரீதியான முன்னெடுப்புகள் மூலம் அனைவருக்கும் வேலை வாய்ப்பை உருவாக்கித் தருவதற்கான ஒரு முயற்ச்சியாக இந்த லண்டன் பயணம் அமைந்துள்ளது.

தமிழ்நாடு மாநிலம் முதலீடுகளுக்கு உகந்த மாநிலமாக திகழ்ந்து வருகிறது. அந்த வகையில் தகவல் தொழில்நுட்பத் துறையில் வெளிநாடுகளுக்கு இணையான தொழில்நுட்ப வளர்ச்சியை தமிழகத்திலும் விரிவுபடுத்துவதற்கான வழிவகைகள் உச்சி மாநாட்டில் விவாதிக்கப்படவுள்ளோம்.

மேலும் உலக நாடுகளிடையே தமிழ்நாட்டின் தொழில் ரீதியான வளர்ச்சி எடுத்துரைத்து முதலீடுகளை ஈர்ப்பதற்க்கான சந்தைப் படுத்தும் நடவடிக்கைகள் இந்த மாநாட்டில் மேற்கொள்ளவுள்ளோம். இது தொடர்பான பிரச்சாரத்தை உலகத் தமிழர் பேரவை முன்னெடுக்க வேண்டும் என்கின்ற கோரிக்கையையும் நடைபெறவுள்ள மாநாட்டில் வைக்கவுள்ளோம்.

மக்களின் தேவை அறிந்து இ-சேவை மையங்களில் எண்ணிக்கை தமிழ்நாட்டில் அதிகப்படுத்தியுள்ளோம். அதன் அடிப்படையில் இந்த ஆண்டு 300 இ-சேவை மையங்கள் செயல்படவுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களையும் ஒன்றிணைத்து தடையற்ற இணைய சேவைகள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com