பெருங்குடி குப்பை கிடங்கில் தீவிபத்து... 2வது நாளாக தீயணைக்கும் பணி தீவிரம்!!

பெருங்குடி குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த 2வது நாளாகதீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.
பெருங்குடி குப்பை கிடங்கில் தீவிபத்து... 2வது நாளாக தீயணைக்கும் பணி தீவிரம்!!

சென்னை மாநகராட்சியில் நாள் ஒன்றுக்கு, 51 லட்சம் கிலோ (5ஆயிரம் டன்) திடக்கழிவுகள் சேகரித்து வருகின்றனர். அவை மக்கும், மக்காத குப்பையாக தரம் பிரிக்கப்பட்டு, மறுசுழற்சி செய்யும் வகையில் பதனிடும் மையங்களுக்கு அனுப்பப்படுகின்றன.

மீதமுள்ள கழிவுகள், பெருங்குடி கிடங்கில் கொட்டப்படுகிறது. அக்கிடங்கு, 225 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதில், பல ஆண்டுகளாக குப்பை கொட்டப்படுகிறது. இதனால், அங்கு, 34.02 லட்சம் கனமீட்டர் அளவில் குப்பை உள்ளது. இந்த நிலையில், நேற்று மாலை மறுசுழற்சி செய்யும் பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அது, குப்பை கிடங்கு முழுதும் பரவி கொழுந்து விட்டெரிந்தது.

காற்றின் வேகம் காரணமாக, தீயிலிருந்து வெண்புகை வெளியேறி சுற்று வட்டார பகுதிகளில் பரவியது. இதனால், அருகில் வசிப்போர் கண்ணெரிச்சல், மூச்சுத்திணறலால் கடும் அவதிக்குள்ளாகினர். தகவல் அறிந்து, துரைப்பாக்கம், மேடவாக்கம், ராஜ்பவன், கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, தீயணைப்பு வாகனங்கள் குப்பை கிடங்கிற்கு விரைந்தன.

கொழுந்துவிட்டெரிந்த தீயால், இரவு வரை தீயணைப்பு வீரர்களும் கண்ணெரிச்சலால் கடும் அவதிக்குள்ளாகினர். தொடர்ந்து தீ பரவாமல் இருக்க தேவையான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்று இரவு வரை தீயை கட்டுப்படுத்தும் முயற்சி தொடர்ந்து நடைபெற்றது. திறந்தவெளி என்பதாலும், சதுப்பு நிலத்தில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதாலும், தீ தொடர்ந்து பரவி வருகிறது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com