பணிப் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்... தமிழக நகராட்சி துப்புரவு ஆய்வாளர் சங்கம் கோரிக்கை!!

பணிப் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்... தமிழக நகராட்சி துப்புரவு ஆய்வாளர் சங்கம் கோரிக்கை!!

தங்களுக்கு பணி பாதுகாப்பை உறுதி செய்ய கோரி தமிழ்நாடு நகராட்சி துப்புரவு ஆய்வாளர் சங்க தலைவர் ஆல்பர்ட் அருள்ராஜ் சென்னை மாநகராட்சி துப்புரவு ஆய்வாளர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தாம்பரத்தில் உள்ள தனியார் விடுதியில் தமிழ்நாடு நகராட்சி துப்புரவு ஆய்வாளர்கள் மற்றும் துப்புரவு அலுவலர்கள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. மாநில தலைவர் ஆல்பர்ட் அருள்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தமிழகம் முழுவதும் இருந்து வந்திருந்த துப்புரவு ஆய்வாளர்கள் மற்றும் அலுவலர்கள் ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்.

அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு நகராட்சி துப்புரவு ஆய்வாளர் சங்க தலைவர் ஆல்பர்ட் அருள்ராஜ், சென்னை மாநகராட்சியில் உளா துப்புரவு ஆய்வாளர்களை தொடர்ந்து பணியில் ஈடுபடுத்த வேண்டும்

அவர்களுக்கான பணி பாதுகாப்பை வழங்க வேண்டும். அதேபோல் காலியாக உள்ள துப்புரவு ஆய்வாளர்கள் பணியிடங்களை உடனடியாக நிரப்பபட வேண்டும். துப்புரவு ஆய்வாளர்களுக்கு பணி உயர்வு குறித்து தமிழக அரசு கவனம் செலுத்தி உரிய பணி உயர்வு வழங்க வேண்டும்.

அதேபோல் துப்புரவு ஆய்வாளர்களின் பணி நேரத்தை வரையறை செய்யவேண்டும். குறிப்பாக தினந்தோறும் 15 அல்லது 16 பணி நேரம் துப்புரவு ஆய்வாளர்கள் பணி செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகிறோம் என்று தெரிவித்தார்.

logo
vnews27
www.vnews27.com