கவுன்சிலர்கள் சகிப்புத் தன்மையுடன் இருக்க வேண்டும்... மூத்த அமைச்சர்கள் அறிவுறுத்தல்!!

மாமன்ற உறுப்பினர்கள் சகிப்புத் தன்மையுடன் இருக்க வேண்டும் சென்னை மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு மூத்த அமைச்சர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர்.
ரிப்பன் மாளிகை
ரிப்பன் மாளிகை

சென்னை மாநகராட்சிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள மாமன்ற உறுப்பினர்களுக்கான ஒருநாள் நிர்வாகப் பயிற்சி முகாம் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் சென்னை ரிப்பன் மாளிகை அம்மா அரங்கில் நடைபெற்றது.

அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய மா.சுப்பிரமணியன், கவுன்சிலர்கள் தங்களுக்கு மாலை, சால்வை பாராட்டு மட்டும் வரும் என நினைக்க கூடாது. எந்த சூழ்நிலையும் எதிர்கொள்ளும் மனப் பக்குவம் இருக்க வேண்டும்.

மாநகராட்சி மன்ற கூட்டத்தை அமைதியாக, பிரச்சனை இன்றி நடத்தி செல்வது அவசியம். சகிப்புத் தன்மை இருக்க வேண்டும் என்று தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து பேசிய கே.என்.நேரு,

மாநகராட்சி கவுன்சிலர்கள் சட்டத்திற்குட்பட்டு நடக்க வேண்டும், சட்டத்திற்கு புறம்பாக எதுவும் செய்ய வேண்டாம்.

கவுன்சிலர்கள் அதிகாரிகளை அனுசரித்து நடக்க வேண்டும். சென்னையை முன்மாதிரி மாநகராட்சியாக உருவாக்க வேண்டும் என்பதற்காக முதலமைச்சர் தொடர்ந்து நிதி ஒதுக்கி வருகிறார். கவுன்சிலாராக சிறப்பாக செயல்பட்டால் எதிர்காலத்தில் நல்ல பதவிகள் தேடி வரும் என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com