கொரோனா.... சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் அதிரடி உத்தரவு

கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த, தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்
 சுகாதாரத்துறை செயலாளர்  ராதாகிருஷ்ணன்
சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

மும்பை, மஹாராஷ்டிரா, டெல்லி, கேரளா மாநிலங்களில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், மாவட்டங்களில் தேவையான முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்.

இதனை தொடர்ந்து, சென்னையில், பெருங்குடி, தேனாம்பேட்டை, அடையாறு, அண்ணாநகர், கோடம்பாக்கம் உள்ளிட்ட மண்டலங்களில் தொற்று அதிகரித்துள்ளது. இதனால், மண்டல அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும். மேலும் திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்று கட்டுப்பாட்டில் உள்ள மாவட்டங்களிலும் கண்காணிப்பு பணிகளில் தொய்வில்லாமல் தீவிர கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்.அறிவுறுத்தினார்.

மேலும், தமிழகத்தில் முதல் தவனை தடுப்பூசியை 93.74 சதவீதத்தினரும், 82.55 சதவீதத்தினர் இரண்டாம் தவனை தடுப்பூசியையும் செலுத்தியுள்ளனர். 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 43 லட்சம் பேர் முதல் தவனை தடுப்பூசியையும், 1.22 கோடி பேர் இரண்டாம் தவனை தடுப்பூசியையும் செலுத்தாமல் உள்ளனர்.

மேலும், தடுப்பூசி செலுத்தாத நபர்களை கண்டறிந்து தடுப்பூசி செலுத்த அறிவுறுத்த வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர்கள், சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர்,மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் சுகாதாரத்துறை செநலர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com