அமெரிக்காவில் இருந்து நாகர்கோவில் வந்தவருக்கு கொரோனா... அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு பரிசோதனை!!

அமெரிக்காவில் இருந்து நாகர்கோவில் வந்தவருக்கு கொரோனா... அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு பரிசோதனை!!

அமெரிக்காவிலிருந்து நாகர்கோவில் வந்த இளைஞர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா குறைந்து வந்த நிலையில் டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கி உள்ளது.

சென்னையில் ஐஐடியில் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இந்த நிலையில் குமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த இன்ஜினியர் ஒருவர் அமெரிக்காவில் இருந்து சமீபத்தில் சொந்த ஊருக்கு வந்தார்.

அவருக்கு கடந்த மூன்று நாட்கள் முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு சுகாதாரப் பணியாளர்கள் மூலம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.அப்போது அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. அதனை தொடர்ந்து அவர் நாகர்கோவிலில் உள்ள அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

மேலும் அவருடன் தொடர்பில் இருந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என 10 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.இதனிடையே இன்ஜினியர் வீடு முழுவதும் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்தனர்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com