சென்னை ஐஐடியில் மேலும் 9 பேருக்கு கொரோனா... 30 ஆக உயர்ந்தது பாதிப்பு எண்ணிக்கை!!

சென்னை ஐஐடியில் மேலும் 9 பேருக்கு கொரோனா... 30 ஆக உயர்ந்தது பாதிப்பு எண்ணிக்கை!!

சென்னை ஐஐடியில் நேற்று முன்தினம் 3 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து அவர்களுடன் தொடர்பில் இருந்த 18 பேருக்கு பரிசோதனை மேற்கொண்டதில் மேலும் 9 பேருக்கு தொற்று உறுதியானது. சென்னை ஐஐடியில் 12 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது.

தொற்று பாதிக்கப்பட்டவர்களின் தொடர்பில் இருந்த 666 பேருக்கு பரிசோதனை மேற்கொண்டதில் மொத்தமாக இதுவரை 29 மாணவர்கள் மற்றும் 1 பணியாளருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று இரண்டு முறை ஐஐடி வளாகத்தில் ஆய்வு மேற்கொண்ட மருத்துவ துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை ஐஐடி வளாகத்தில் தீவிரப்படுத்த கல்லூரி நிர்வாகத்திற்கும் மாநகராட்சி அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டு இருந்தார்.

நேற்று மட்டுமே 666 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்ட நிலையில் இன்று மற்றும் நாளை 1500 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளன.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com