மின்சாரம் தாக்கி ஒப்பந்த ஊழியர் பலி... உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு!!

கன்னியாகுமரி அருகே மின்சாரம் தாக்கி உயிரிழந்த ஒப்பந்த ஊழியருக்கு நிவாரணம் கேட்டு உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்ப்பட்டது.
மின்சாரம் தாக்கி ஒப்பந்த ஊழியர் பலி... உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு!!

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உள்ள திட்டுவிளை வடக்கு மார்த்தால் பகுதியை சேர்ந்தவர் ஹைதர் அலி. 60 வயதான இவருக்கு மனைவி, நான்கு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். ஹைதர் அலி கடந்த 20 ஆண்டுகளாக பூதப்பாண்டி மின்வாரிய அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று மார்த்தால் காரியாங்கோணம் பகுதியில் ஒரு வீட்டில் இரண்டு நாட்களாக மின் விநியோகம் தடைப்பட்டதாக வந்த பொறியாளரின் அழைப்பின் பெயரில் மின் இணைப்பு சீரமைப்பு பணிக்காக ஹைதர்அலி சென்றார். அதற்காக அவர் மின்கம்பத்தில் ஏறி சீரமைப்பு பணியில் ஈடுபட்டார். அப்போது திடீரென மின்சாரம் தாக்கி ஹைதர் அலி கம்பத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.

இதனை கண்ட அந்த பகுதி மக்கள் ஹைதர் அலியை மீட்டு சிகிச்சைக்காக பூதப்பாண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதுபற்றி தகவல் அறிந்த பூதப்பாண்டி மின்வாரிய அலுவலகம் மூலம் பூதப்பாண்டி போலீசில் மின்சாரம் தாக்கி ஒருவர் இறந்து விட்டதாக புகார் செய்யப்பட்டது. இதை அறிந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ஹைதர் அலிக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று திட்டுவிளை பேருந்து நிலையம் அருகில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டத்திற்கு பூதப்பாண்டி 5வது வார்டு கவுன்சிலர் அசாருதீன் தலைமையில் எஸ்டிபிஐ கட்சியினர் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் திரண்டனர். இதுபற்றி தகவல் அறிந்த பூதப்பாண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது இறந்தவர் குடும்பத்திற்கு 10 லட்சம் நிதி உதவி, குடும்பத்தில் ஒருவருக்கு வேலையும் வழங்க வேண்டும் என கோரிக்கை மனு கொடுத்தனர். இந்த மனுவை மின்சார வாரிய பொறியாளர் வாங்கி அரசுக்கு பரிந்துரைப்பதாக கூறினார். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர் மேலும் போலீசார் இறந்தவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com