இன்று தொடங்கியது 12-ஆம் வகுப்பு பொது தேர்வு

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று துவங்க உள்ளது. மே 6ஆம் தேதி 10-ஆம் வகுப்பு பொது தேர்வும், மே 10 ஆம் தேதி 11-ஆம் வகுப்பு பொது தேர்வு தொடங்க உள்ளது.
12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு
12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு

கொரோனா பரவல் காரணமாக பல மாதங்கள் கடந்த டிசம்பர் மாதம் பள்ளிகள் மூடப்பட்டு மீண்டும் பிப்பிரவரி மாதம் திறக்கப்பட்டது. இதனால் பாடங்கள் முடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. அதன் படி பாடங்கள் பொது தேர்வுக்கு குறைக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டது.

இதே போல் கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக முழுவதுமாக பொதுத்தேர்வு நடைபெறாததால் மாணவர்கள் பொது தேர்வை எதிர்கொள்ள ஏதுவாக 10,11,12 ஆம் வகுப்புகளுக்கு 2 திருப்புதல் தேர்வு நடத்தப்பட்டது.

இந்தநிலையில் இன்று 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு தொடங்க உள்ளது. 2 ஆண்டுகளுக்கு பிறகு பொதுத்தேர்வு நடத்தப்படுவதால் பள்ளிக்கல்வித் துறை சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி 12-ஆம் வகுப்பு தேர்வு இன்று துவங்கி, 28ம் தேதி நிறைவடைகிறது. இந்த தேர்வில் 7 ஆயிரத்து 506 பள்ளிகளில் இருந்து, 3 லட்சத்து 98 ஆயிரத்து 321 மாணவர்கள், 4 லட்சத்து 38 ஆயிரத்து 996 மாணவியர் என மொத்தம், 8 லட்சத்து 37 ஆயிரத்து 317 பேர் தேர்வு எழுத உள்ளனர்.

தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்க, 37 அதிகாரிகள் கொண்ட உயர்நிலைக் குழு; 4,291 பேர் கொண்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இன்று துவங்க உள்ள பொதுத் தேர்வு தொடர்பாக மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் உள்ளிட்டோர், தங்களின் குறைகள் மற்றும் புகார்களை தெரிவிக்க, அரசு தேர்வுத் துறை சார்பில், தேர்வு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

காலை 8:00 மணி முதல், இரவு 8:00 மணி வரை கட்டுப்பாட்டு அறையை, 94983 83081, 94983 83075 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com