சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று பணியாளர்கள் போராட்டம்... பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை!!

பணி நிரந்தரம் செய்யக்கோரி பட்டினப்பாக்கத்தில் உள்ள நகர் நிர்வாக அலுவலக வளாகத்தில் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று பணியாளர்கள் போராட்டம்... பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை!!

. பெருநகர சென்னை மாநகராட்சியில் குடிநீர் வழங்கல் மற்றும் சாக்கடை கழிவுகள் கழிவு நீர் அகற்றும் பணிகளில் சுமார் 1800க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வருவதாகவும் 10 வருடங்களுக்கு மேலாக பணி நிரந்தரம் செய்யப்படாமல் ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே பணி செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

. தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி முதல் போராட்டம் சுமார் 300க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பட்டினப்பாக்கத்தில் உள்ள நகர நிர்வாக அலுவலக வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டத்தின் இடையில் பேட்டியளித்த குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்றும் தற்காலிக பணியாளர் மணிகண்டன், 20 ஆண்டுகளுக்கும் மேலாக 1800க்கும் மேற்பட்ட பணியாளர்கள் த‌ற்கா‌லிகமாக பணியாற்றி வருகிறோம்.

எங்களுடைய பணியை நிரந்தரம் செய்யக்கோரி முதலமைச்சர் மற்றும் நகர்ப்புற நிர்வாகத்துறை அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகள் என அனைவரிடமும் கோரிக்கை மனு அளித்துள்ளோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எங்களை பணி நிரந்தரம் செய்வதற்கு அரசிடம் பொருளாதாரம் இல்லை என்று கூறுகிறார்கள். அதனை ஏற்றுக் கொள்கிறோம்.

எங்களுக்கு கூடுதலாக சம்பள உயர்வு அளித்து பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என நாங்கள் கேட்கவில்லை. எங்களுக்கு தற்போது வழங்கிவரும் ஊதியத்தில் பணி வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

3 நாட்கள் நாங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் சென்னையில் மொத்த கழிவுநீர் அகற்றும் பணிகளும் பாதிக்கப்படும். சென்னை நிலை என்ன ஆகும் எனவே அரசு உடனடியாக துரிதமாக எங்கள் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுக்க வேண்டும்

மேலும் அனைவருக்கும் விடியல் கொடுக்கும் தமிழக முதல்வர் எங்களுக்கும் விடியல் அளிக்க வேண்டும். 1800 பணியாளர்களையும் எந்த வித முகாந்திரமும் இல்லமால் பணி நிரந்தரம் செய்யும் வரை போராட்டம் தொடரும்.

மேலும் கடந்த ஆண்டு பணி நிரந்தரம் செய்து விடுகிறோம் என்று அரசு உறுதி அளித்ததாகவும் ஆனால் தற்போது மீண்டும் ஒப்பந்த அடிப்படையிலேயே பணியாற்ற கூறுவதாகவும் தெரிவிக்கின்றனர் என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com