வேற லெவலில் உருவாகும் சென்னை விமான நிலையம்.... ஆர்வத்தில் பயணிகள்

விமான நேரம், பாதுகாப்பு சோதனை, உணவு வசதி பெற போன்ற அனைத்து பணிகளுக்கும் புதிய செயலி விரைவில் அறிமுகம் விமான நிலைய இயக்குனர் சரத்குமார் தகவல் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையம்
சென்னை விமான நிலையம்

சென்னை விமான நிலைய ஆணையக இயக்குனர் சரத்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

சென்னை விமான நிலையத்தில் உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

கொரோனா தொற்றுக்கு சென்னையில் விமான சேவை சகஜ நிலைக்கு கொண்டு வர எடுத்த நடவடிக்கையால் உள்நாட்டு முனையத்தில் 95 சதவீதம் உயர்ந்து உள்ளது. பன்னாட்டு முனையத்தில் 60 சதவீதம் வரை உயர்ந்து உள்ளது.

சென்னை விமான நிலையத்திற்கு வரக் கூடியவர்களுக்காக மல்டிலேவல் கார் பார்க்கிங் கட்டிடம் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் 2200 கார்கள் நிறுத்த முடியும். மேலும் முனையங்கள் கார் பார்க்கிங், மெட்ரோ நிலையம் ஆகியவற்றை இயக்க கூடிய வகையில் அமைக்கப்பட்டு உள்ளதால் பயணிகளுக்கு மிகவும் வசதியாக இருக்கும்.

மேலும் உணவு, சினிமா மாலும் அமைக்கப்பட உள்ளது. இந்த கார் பார்க்கிங் பணிகள் ஜுன் மாதம் நிறைவு பெற்று பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

விமான நிலைய விரிவாக்க பணிகள் வேகமாக நடந்து வருகிறது. நவீன வசதிகளுடன் கொண்ட பன்னாட்டு முனையங்களாக செயல்படும். இதனால் 35 மில்லியன் பயணிகள் கையாள கூடிய வசதி செய்யப்பட்டு உள்ளது. விமானங்கள் தரையிறங்கியதும் விரைவாக நிறுத்துமிடம் செல்ல 2 ரெபிட் டாக்ஸி பாதை உள்ளது. கூடுதல் டாக்ஸி பாதைகள் மேம்படுத்தப்படுத்தப்படும்.

விமான சேவைகள் அதிகரிப்பதால் நவீன வசதிகள் மேம்படுத்த வேண்டியதாக உள்ளது. பாதுகாப்பு சோதனை, உடமைகள் சோதனை பகுதிகளில் பயணிகளுக்கு ஏற்படும் கால நேரம் தாமதத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சென்னை விமான நிலையத்தில் விமான பயண நேரம், போர்டிங் வசதி, உணவு, குறை போன்றவற்றை பயணிகளின் வசதிக்காக புதிய செயலி உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய செயலி விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது. மேலும் விமான நிலையத்தின் முன் உள்ள பகுதி பசுமை பூங்கா உருவாக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com