தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 31 ஆண்டுகளுக்கு முன்பு 17 வயதான பேரறிவாளன் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சம்பந்தப் படுத்த பட்டு கைது செய்யப்பட்டார். இப்போது வயது அவருக்கு 48 ஆகிறது. தற்போது உச்ச நீதிமன்றத்தின் மூலம் விடுதலை செய்யப்பட்டு சுதந்திரமாய் இருக்கிறார்.
உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை வரவேற்று பாராட்டுகின்றேன். இந்த தீர்ப்பின் மூலம் இதே வழக்கில் 31 ஆண்டு காலமாக சிறையில் இருக்கக்கூடிய மற்ற ஆறு பேரும் விடுதலை செய்யப்பட வேண்டும்.
அதற்கான நடவடிக்கைகளை தமிழக முதல்வர் மேற்கொள்வார் என நம்புகிறேன். இது மட்டும் இல்லாமல் தமிழக சிறையில் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ளவர்களையும் இஸ்லாமிய சகோதரர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என இந்த அரசை கேட்டுக் கொள்கிறேன்
. ஆளுநர் செய்தது சட்டத்திற்கு புறம்பான செயல். தமிழக அமைச்சரவை இந்த 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என ஆளுநருக்கு பரிந்துரை செய்த நிலையில் கையெழுத்துப் போட வேண்டிய நிலையில் அதை மீறி இவர் குடியரசுத் தலைவருக்கு அனுப்புவதற்கு அரசியல் சட்டத்தில் இடமில்லை. தவறு திருத்தப்பட வேண்டும்.
ஏற்கனவே அமைச்சரவையில் 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என பரிந்துரை செய்ததன் காரணமாக அந்த பரிந்துரை மதித்து இந்த ஆறு பேரையும் விடுதலை செய்ய வேண்டும். இந்த வழக்கு பொய்யாக ஜோடிக்கப்பட்ட வழக்கு என்பது இந்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு மூலம் உண்மையாக இருக்கிறது.
காலம் கடந்தேனும் நீதி வெள்ளும் என்பது தீர்ப்பின் மூலம் வெளிவந்துள்ளது. எந்த ஒரு தொடர்பும் இல்லாமல் 31 ஆண்டுகள் சிறையில் இருந்த இவருக்கு மத்திய அரசும் மாநில அரசும் அவரது வாழ்க்கைக்கு உதவ முன்வர வேண்டும். இது அரசின் மனிதாபிமான கடமையாகும் என்று தெரிவித்தார்.