
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று அதிகாலையில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்து இறங்கிய பயணிகளின் உடமைகளை சோதனை செய்தனர்.
பயணி ஒருவரின் பையை சோதனை நடத்தினர். அப்போது பைக்குள் 2 கிலோ கஞ்சா மறைத்து வைத்து இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. உலர்ந்த கஞ்சாவை கடத்தி வந்த நபரை கைது செய்து விசாரணை நடத்தியதில் அவர் மாதவரத்தைச் சேர்ந்த எபினேசர் என்பது தெரிந்தது.
எங்கே 2 கிலோகஞ்சாவை கடத்தி வந்தார்? யாருக்கு சப்ளை செய்ய உள்ளார்? என்பது தொடர்பாக ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாநில போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாரிடம் கைதானவரை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் ஒப்படைக்க உள்ளனர்.