வருமுன் காப்போம் திட்டம் மூலம். இதுவரை 8.64 லட்சம் பேர் பயன் -அமைச்சர் மா. சுப்பிரமணியம்

மா. சுப்பிரமணியம்
மா. சுப்பிரமணியம்

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் சென்னை வானகரம் பகுதியில் வருமுன் காப்போம் திட்டம் முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் துவக்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்,

தமிழகத்தில் 1248 வருமுன் காப்போம் திட்ட முகாம் நடைபெற்று இருக்கிறது, இதன் மூலம் 8.64 லட்சம் பேர் பயன்பெற்று இருக்கிறார்கள் என்றார்

18-31 ஆம் தேதி வரை 385 வட்டார அளவிலான சுகாதார திருவிழா நடத்த வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்து இருக்கிறது. அதன் அடிப்படையில் இன்று முதல் முகாமை துவக்கி வைத்து இருக்கிறோம் இந்த மாதத்திற்குள் அனைத்து முகாம்களும் நடத்தி முடிக்கப்படும் என கூறினார்.

திமுக இன்னும் கல்வியை ஏன் மாநில பட்டியலுக்குள் கொண்டுவரவில்லை என்று ஜெயக்குமார் கேட்டதற்கு பதிலளித்த அமைச்சர் மா.சு, மாநில உரிமைகளை மத்திய அரசிடம் விட்டுக் கொடுத்தது அதிமுக தான் அவர்களா இந்த கேள்வியை கேட்பது வேடிக்கையாக உள்ளது. கல்வியை பாதுகாப்பதற்காக தமிழக அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க வேண்டும் என்று தொடர்ந்து மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகிறோம் என்றார்.

தடுப்பூசி செலுத்தி கொள்வார்களின் எண்ணிக்கை குறைந்து வருவது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், தடுப்பூசி தொடர்ந்து இயக்கமாகவே நடத்தி வருகிறோம் மக்கள் கூடுதலாக தடுப்பூசி செலுத்துவதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

மேலும், இந்த நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர் பாலு, அமைச்சர் ஆவடி நாசர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com